Saturday, June 19, 2010

காட்டு வேட்டை

அடக்குமுறை தாளாமல்
கொதித்தெழுந்து கொன்றபின்
ஜார்ஜ் ராய்* பாவமென்றும்,
இது அஹிம்சை நாடென்றும்
அலறி துடிக்கின்றன
முதலாளித்துவ ஊடகங்கள் ........

திரைக்கு வந்து
சில வாரங்களே ஆன
புத்தம் புதிய திரைப்படங்களை
ஒளிபரப்புவதை போல
காட்டு வேட்டையை
ஒளிபரப்ப மாட்டார்கள் ..
இந்திரா, ராஜீவ் பட்டியலில்
தன்னையும் மாவோஸ்ட்கள்
சேர்த்து விடுவார்கள்
என்று ப.சிதம்பரம் அறியாதவரா என்ன??

உயிர் வாழ்வதற்கு கூட
துப்பாக்கி தோட்டாவை
எங்கள்
அப்பாவி பழங்குடி மக்களை
துரத்தியடிக்கும்
இந்திய ராணுவத்தை ,
பழங்குடி மக்களின் வாழ்வுகாக
நோக்கி மாவோஸ்ட்களின்
தோட்டாக்கள் காரிஉமிழும்
காட்சியை ஓளிபரப்ப
தைரியம் உள்ளதா உங்களிடம்?

இருந்தாலும் ஒளிபரப்பி விடாதீர்கள்!!!
முதலாளித்துவத்தின் மூக்கு கண்ணாடியினூடே
உழைக்கும் மக்களை பார்க்கும்
உங்கள் கண்களை நோக்கி
ஈட்டிகள் பாயும் நாள்
வெகு தொலைவில் இல்லை!!
*ஜார்ஜ் ராய்:மனித வள மேம்பாட்டு அதிகாரி என்ற போர்வையில் இருந்து உழைக்கும் மக்களை சுரண்டியதால்,கொள்ளப்பட்ட மிருகம் ...
Friday, June 18, 2010

காதலை நிர்மாணிப்பது சாதியா?

மார் தட்டி நான் நின்ற சாதியெல்லாம்

மா உருவாய் என் முன்னே நிற்குதடி

காதல் ஒன்றே நான் செய்த "பாவமென்றால்"

கல்லறைகள் கட்டிடுவோம் ஜாதிகெல்லாம்...

http://www.vinavu.com/2010/06/15/delhi-honour-killing/

Tuesday, June 8, 2010

ஈழத்து க(வி)தை

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் என்னை பாதித்த ராஜபக்சேவின் அதிபர் பதவியும் ,அதனால் உருவான சிறு கவிதையையும் பகிர்ந்து கொள்கிறேன்.
கவிதையெல்லாம் எழுத தெரியாத என்னால் உங்களுக்கு ஏற்படும் சிரமத்திற்க்கும் சிரமேர்கிறேன்..ஆனால் யாரோ ஒருவரின் மனதில் சிறு கீறலை இக்கவிதை ஏற்படுதுமாயின் ஆகமகிழ்வேன், அடக்குமுறைகளை ஒடுக்க நினைக்கும் ஒருவர் என் கவிதையை படித்தார் என்று....
நன்றி

குண்டு மழையினால்
குருதி வெள்ளம்.
நடப்பவைகளை யுகித்தறிய முடியதாயாத மழலைக்கு
உணர்த்த வேண்டிய பெற்றோரும் சடலங்கலாய்,
அழுது வீங்கிய ஈர கன்னங்களில் தரப்பட்ட திடீர் முத்ததையும்,
குருதி கரை படிந்த கைகளில் தரபட்ட இனிப்பையும் பொருட்படுத்தாது,,
மீண்டும் அதிபாராய் உலா வந்து கொண்டிருக்கும் ராஜபக்சேவைசெய்வதறியாது வெறித்து கொண்டிருந்தாள் அந்த ஈழ சிறுமி!!!

செம்மொழி மாநாடு

இந்திய மேலாதிக்க
சுவர்களில்எதிரொலித்தடங்கிய
ஈழ தமிழர்களின் கதரலை
கேட்க மறுத்த செவிகள்
கேட்க துடிக்கின்றன,
செம்மொழி மானாட்டின் நிகழ்ச்சி நிரலை...

ரத்த வெறி ராஜபக்செவின்
இனவெரியை மூழ்கடிக்க
முள்ளிவாய்க்காலில்
பாய்ந்தோடியசெந்நிற குருதியையும்,
அவர்களின் இருண்ட
நிகழ்காலத்தையும்,
வண்ணங்களில் குழைத்து
கட்சி கொடிகளாய்
தெருவெங்கும் கட்டி
செம்மொழி மாநாட்டை துவக்க
இருக்கிறார்கள்
ஓட்டு கடலில் மட்டுமே
கட்டு மரமாய்
மிதக்க துடிக்கும் நம் 'தமிழின தலைவர்கள் '

http://www.vinavu.com/2010/06/21/karunanidhi-chozhan/